Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைக்கு…. “இவர் மட்டும் தான் காரணம்” ட்ரம்ப் திட்டவட்டம்…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு இன்னும் ஒருசில நாட்களில் தலிபான்களின் ஆட்சி அமையவுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் அச்சமடைந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். பேருந்துகளில் செல்வதுபோல் கூட்டமாக ஏறியும், விமானத்தில் தொங்கியபடியும் பயணம் செய்வதால் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய அமைச்சர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தவரை அங்கு அமைதி நிலவியது.

அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்ட பின் அங்கு நிலைமை தலைகீழாக மாறியது. ஆப்கானிஸ்தானுக்கு ஜோபைடன் செய்ததை யாராலும் மறக்க முடியாது. இது அமெரிக்க வரலாற்று தோல்வி. இது காலம் முழுவதும் பேசப்படும். இதற்கு பொறுப்பேற்று அமெரிக்க அதிபர் பதவியை அதிபர் ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |