ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று இரண்டாவது அலையால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஏழு வாரங்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும் டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
மேலும் கொரோனாவால் சிட்னியில் நேற்று ஒரே நாளில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக செப்டம்பர் இரண்டாம் தேதி வரை மெல்போர்ன் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.