ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களாட்சியை அப்புறப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசம் வந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை முறையாக தொடர்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே தற்போது தலிபான் அரசை ஆதரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தலிபான்களின் நடவடிக்கையை பொருத்து அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற ரஷ்ய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.