குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்ப்பால் பற்றிய கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாகனம் மூலமாக தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை குறித்த விழிப்புணர்வை பிரச்சாரம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதன்பின் அந்த வாகனத்தை அலுவலகத்தில் வைத்து கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குதல் மூலமாக ஏற்படும் நன்மைகள், தாயின் சுகப்பிரசவம், சிசேரியன் பிரசவத்தில் உடனடியாக தாய்ப்பால் கொடுப்பது குறித்து, தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பிரச்சாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் போன்ற விளம்பரங்களை ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.