தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஆனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்துள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.மேலும் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இன்று தகுதி உள்ளவர்களை கண்டறிந்து வழங்கப்படும் என்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.