தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த பொது, தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்துள்ளார்.
Categories