Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் இராசிக்கு ”மனைவியிடம் உரசல் ஏற்படும்” வீண் அலைச்சல் உண்டாகும் …!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொண்டாலே போதும் அத்தனை விதமான அனுகூலத்தையும் பெறமுடியும். மனைவியின் செயலால்  உறவுகளிடையே சின்ன சின்ன உரசல்கள் ஏற்படும். அதையும் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள மிகவும் சிறப்பு. அப்போதுதான் இழப்பை நீங்கள் தவிர்க்க முடியும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வாடிக்கையாளர்களிடம் மட்டும் அனுசரித்து பேசுவது  நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

குடும்பத்தில் இருப்பவர்களால்  ஒத்துழைப்பு ஏற்படும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு அதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் முக்கியமான  பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரு நீல ஆடை அணிந்து சென்றாலோ  அல்லது கைக்குட்டையை  எடுத்துச் சென்றாலோ வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். நீங்கள் நினைத்தது நடக்கும். அதுபோலவே மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், மனதில் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுடைய செல்வ நிலை உயரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம் கருநீல நிறம்

Categories

Tech |