ரிவால்டோ காட்டு யானை பிற யானைகளுடன் நெருங்கி பழகுவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மாவனல்லா, மசினகுடி போன்ற பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இந்த காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மே மாதம் பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை முடிந்த பிறகு யானையை வனத்துறையினர் கடந்த 2ஆம் தேதி மரக்கூண்டிலிருந்து வெளியே கொண்டு வந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். மேலும் வனத்துறையினர் ரேடியோ காலர் மூலம் ரிவால்டோ யானையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரிவால்டோ பிற காட்டு யானைகளுடன் வனப்பகுதியில் சகஜமாக பழகி வருகின்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது ரிவால்டோ காட்டு யானை தற்போது இயல்பான தன்மைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஊருக்குள் முகாமிட்டிருந்த சமயத்தில் பொதுமக்கள் ரிவால்டோ யானைக்கு உணவு அளித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த யானை வனப்பகுதியில் இருக்கும் பசுமையானவற்றை தின்று அருகில் உள்ள ஆற்றில் இறங்கி குறிக்கின்றது. மேலும் ரிவால்டோ பிற காட்டு யானைகளுடன் நெருங்கி பழகுவதாகவும், ரேடியோ காலர் மூலம் இதனை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.