விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று புதிய உற்சாகமும் உத்வேகமும் உங்களுக்கு ஏற்படும். பணியில் பணிவும் துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் லாபமும் சோகமும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பொருள் வரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகளை தாண்டி முன்னேற செல்ல வேண்டியது இருக்கும். அதை நீங்கள் செய்வதற்கு தயங்க மாட்டீர்கள். பெரியவரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மையும் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள்.
அதை போலவே வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் கொஞ்சம் கவனமாகவே பயன்படுத்துங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அனைத்து காரியங்களும் வெற்றி கொடுக்கும்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்