பிரிட்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையிலும் பெண் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் Plymouthஐச் பகுதியை சேர்ந்த Jake Davison என்பவர் பெண்களின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடக்கும்போது Lee Martyn தான் காயமுற்ற நிலையிலும் தன் மகளை காப்பாற்ற தன் உடலால் குண்டுகளை மறைத்துள்ளார். எனினும் ஒரு குண்டு அவரது உடலைத் துளைத்து Sophieயை நோக்கி சென்றதில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த Michelle Parsonage (53) என்ற பெண் தாக்குதலில் பலியான அவர்களின் உடலுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் தன் வீட்டில் இருந்த பெட்ஷீட் ஒன்றை கொண்டுவந்து இறந்த தந்தை மற்றும் மகளின் உடல்களை மூடியுள்ளார். இதனிடையே jake மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் Michelleம் அவரது மகன் Ben (33 காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதனிடையே Parsonage தன் உயிருக்கு போராடும் நிலையிலும் இறந்தவர்கள் உடலுக்கு மரியாதை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.