Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்”… மனைவியின் பணி மகிழ்ச்சி..!!

கன்னிராசி அன்பர்களே…!! இன்று பழைய நிலுவை தொகை உங்களின்  கைக்கு கிடைப்பதால்  நீங்கள் மனம் உற்சாகமாக காணப்படுவீர்கள். குழந்தைகள் மீது அன்பும் அவர்களின் முன்னேற்றம் மீது ஆர்வம் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு ஓரளவு தான் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக இருந்த மன கஷ்டங்களும், எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இன்றைக்கு இருக்கும். அனைவரையும் இன்றைக்கு வசீகரமாக பேசி கவர்வீர்கள். அந்த விஷயத்தில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்த்த வெற்றியும் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்றைய  நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். அதே போல இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் நீங்கள் நினைத்த காரியம், செய்கிற காரியம் வெற்றியை கொடுக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |