சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சீரான வாழ்க்கை பயணத்தில் சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வருமானக் குறைவு கடன் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடித்து ஓரளவு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
ஆனால் இன்று உழைப்பு கூடும். வாக்குவாதங்கள் கொஞ்சம் இருக்கும். அதே போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உத்திரவாதம் யாருக்குமே கொடுக்காதீர்கள். பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும், பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்தும் செய்ய வேண்டியதிருக்கும். தயவு செய்து அந்த பஞ்சாயத்துக்களில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மிகவும் சிறப்பு. இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிற கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் போகின்ற காரியங்கள் சிறப்பாக இருக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்