கடகம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டவர்கள் நீங்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இன்று ஒன்று சேர்வீர்கள். இன்று பெண்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதிய உற்சாகமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும்.
நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். இன்று மனதில் தேவையில்லாத பயமும் இருக்கும். இன்று நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள், முன்னேறிச் செல்லலாம். இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மனதார விஷ்ணு பகவானை நினைத்து வழிபட்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்