Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி வீடியோ… பறந்து கொண்டிருந்த விமானம்… கீழே விழுந்து 2 பேர் பலியான சோகம்..!!

காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து  2 பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அங்கிருந்து புறப்படும் விமானத்தில் ஏறி எப்படியாவது வெளி நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று முயல்கின்றனர்.. இந்தநிலையில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்  டயர் அமைந்துள்ள பகுதியின் மேல் தொங்கியபடி சென்ற 2 பேர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்..

Kabul Airport Tarmac Overrun by Citizens Fleeing Taliban

இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மற்றொரு வீடியோவில் விமானத்தை தொத்தி கொண்ட படி மக்கள் ஓடும் காட்சியும் வெளியாகியுள்ளது.. முன்னதாக காபூல் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/krishnajindal07/status/1427187639124336643

Categories

Tech |