பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது..
ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. அந்நாட்டில் உள்ள காபூல் உட்பட அனைத்து பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.. ஓரிரு நாளில் அங்கு தலிபான் ஆட்சி அமைந்து விடும்.. அந்நாட்டு மக்கள் காபூல் விமான நிலையத்தில் கூட்டமாக கூடி எப்படியாவது தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று நிற்கின்றனர்..
இதையடுத்து அங்கு விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. அங்குள்ள மக்களின் நிலை என்னவென்று உலக நாடுகள் பல கவலை தெரிவிக்கின்றன.. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது..
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்ற போது, பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள் ஒரு ஹெலிகாப்டர் உடன் தனது நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், ஹெலிகாப்டரில் திணிக்க பட முடியாத மீதம் இருந்த பணம் அப்படியே விட்டு செல்லப்பட்டதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.