Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடியிலிருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கட்டிட தொழிலாளி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விசாரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு மாடியிலிருந்து பைப் மூலம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த முருகனை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |