Categories
அரசியல் மாநில செய்திகள்

“பூனை கதை சொன்ன மாஜி அமைச்சர்” பிடிஆர் கொடுத்த பதிலடியால்…. பீதியான அதிமுக…!!!

நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்ஜெட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அரசின் நிதி நிலையை சரி செய்ய 2, 3 ஆண்டுகள் ஆகும் என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிதிநிலை அறிக்கையை தயார் செய்யும் போது குட்டி பூனையை தாய் பூனை கவ்வுவது போல இருக்கவேண்டும். பூனை எலியைக் கவ்வுவது போல இருக்க கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார் .

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைக்கு உள்ள ஒரு ரூபாயும் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னால் உள்ள ஒரு ரூபாயும் ஒன்றாகாது. ஒவ்வொரு வருடமும் ரூபாயின் மதிப்பு மாறி வருகிறது. எனவே அதை வைத்து கணக்கு போடக்கூடாது. 18 சதவீதமாக இருந்த மாநில உற்பத்தி கடன் கலைஞர் ஆட்சியில் 15.7 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் 1% குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் 27 சதவீதமாக உற்பத்தி கடன் அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி ஏன் வழங்கவில்லை என்றும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்தததாலும் உற்பத்தி கடன் அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு  நிதி ஒதுக்கவில்லை. எனவே விதி எண் 110ன் கீழ் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி, செயல்படுத்தப்பட்ட திட்டம், செயல்படுத்தாத திட்டம் ஆகியவற்றை பேரவையில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் சமயத்தில் நிதியமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவினரை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |