நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மிலிந்த் ராவ் இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் . தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.