Categories
உலக செய்திகள்

கவலையளிக்கிறது! ஆப்கானில் இருந்து வருபவர்களை ஏத்துக்கோங்க …. ஐநா வலியுறுத்தல்…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |