நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம், ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் :
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சாதுரிய பேச்சால் அனைவரையும் கவரக் கூடியவர்களாக இருப்பீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகி பெரிய மனிதர் என பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் இருக்கும். இன்று அலுவலக பலன்களை நீங்கள் சந்திக்க கூடும். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரம் நிறைவான லாபத்தை கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி பெறுவீர்கள். மன அமைதியுடன் காண்பீர்கள். சக மாணவர்கள் ஒத்துழைப்போடு முக்கியப் பணியையும் மேற்கொள்வீர்கள்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இன்று உங்களுக்கு இருக்கும். உடல் ஆரோக்கியம் இன்று நல்லபடியாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாருடன் இன்று வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்றைய நாள் நீங்கள் மன அமைதியுடன் காண்பீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து செல்வது, நீங்கள் சென்ற இடத்தில் காரியங்கள் சிறப்பாக இருக்கும். செல்வ செழிப்புடன் காணலாம். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை மனதார நினைத்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் :
ரிஷபம் ராசி அன்பர்களே : இன்று திருப்திகரமான பணவரவு மனமகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத வரவுகளும் ஏற்றத்தைக் கொடுக்கும். புதிய ஆண் பெண் நண்பர்கள் உங்களுக்கு அமையக்கூடும். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். உங்களுக்கு நிதிநிலைமை செயல்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க இருந்த சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து காணப்படும். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்க கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது மிகவும் நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையை சந்திக்கக்கூடும். இன்று அனைவரின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களில் ஈடுபடும் போது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிற கைக்குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். உங்களுடைய முயற்சியில் வெற்றியும் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் :
மிதுனம் ராசி நேயர்களே : இன்று வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். சிலருக்கு பணமுடை மற்றும் பண இழப்புகள் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை நீங்கள் உடனடி செய்ய வேண்டாம். அதாவது தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மற்றவருடன் சின்னதாக பகை ஏற்படக்கூடும். பேசும்போது பார்த்துப் பேசுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் ஓரளவு வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள்.
மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தீர்ந்து மனநிலையில் மாற்றம் இருக்கும். பண நெருக்கடி குறையும். நீண்ட நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பணவரவு உங்களிடம் வந்து சேரும். ஆனால் அனைத்தும் கால தாமதத்துடன் வந்துசேரும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்றைய நாள் நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை பயன்படுத்தினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வாய்ப்புகள் வந்து சேரும். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்று நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
கடகம் :
கடகம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவுவதில் பேரின்பம் கொண்டவர்கள் நீங்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இன்று ஒன்று சேர்வீர்கள். இன்று பெண்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதிய உற்சாகமும் பிறக்கும். இன்று குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
இன்று மனதில் தேவையில்லாத பயமும் இருக்கும். இன்று நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள், முன்னேறிச் செல்லலாம். இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மனதார விஷ்ணு பகவானை நினைத்து வழிபட்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
சிம்மம் :
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சீரான வாழ்க்கை பயணத்தில் சில தடைகளும் சிக்கல்களும் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். மனைவியுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வருமானக் குறைவு கடன் தொல்லைகள் கொஞ்சம் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடித்து ஓரளவு பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால் இன்று உழைப்பு கூடும்.
வாக்குவாதங்கள் கொஞ்சம் இருக்கும். அதே போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உத்திரவாதம் யாருக்குமே கொடுக்காதீர்கள். பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும், பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்தும் செய்ய வேண்டியதிருக்கும். தயவு செய்து அந்த பஞ்சாயத்துக்களில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மிகவும் சிறப்பு. இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிற கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் போகின்ற காரியங்கள் சிறப்பாக இருக்கும். அதை போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்டமான எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
கன்னி :
கன்னிராசி அன்பர்களே…!! இன்று பழைய நிலுவை தொகை உங்களின் கைக்கு கிடைப்பதால் நீங்கள் மனம் உற்சாகமாக காணப்படுவீர்கள். குழந்தைகள் மீது அன்பும் அவர்களின் முன்னேற்றம் மீது ஆர்வம் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மிகவும் மகிழ்ச்சி கொடுக்கும். இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு ஓரளவு தான் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக இருந்த மன கஷ்டங்களும், எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இன்றைக்கு இருக்கும். அனைவரையும் இன்றைக்கு வசீகரமாக பேசி கவர்வீர்கள். அந்த விஷயத்தில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்த்த வெற்றியும் இருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். அதே போல இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் நீங்கள் நினைத்த காரியம், செய்கிற காரியம் வெற்றியை கொடுக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
துலாம் :
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பெண்களால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். வாகன விபத்தை தடுக்க வண்டியில் மெதுவாகச் செல்லுங்கள். உறவுகளுடனான கருத்து வேறுபாட்டை தவிர்க்க முயலுங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி இருக்கும். அன்பு பிறக்கும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களுமே அனுகூலமாகவே நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதியாக இருப்பீர்கள். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உங்களுக்கு உற்பத்தி விற்பனை அதிகமாகவே இருக்கும். இன்று உழைப்பு கூடும் நாளாக இருக்கும்.
பணவரவு ஓரளவு வந்து பையை நிரப்பும் நாளாக இருக்கும். இன்றைய நாள் செல்வ செழிப்புடன் காணப்படுவீர்கள். மற்றவருடன் பேசும் போது மட்டும் கொஞ்சம் கவனம் இருங்கள். உங்களுடைய பேச்சில் மட்டும் நிதானத்தை இன்று கடை பிடித்து விட்டால் அனைத்துமே சிறப்பாகவே இருக்கும். அது போல நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஊதா நிறம்
விருச்சிகம் :
விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று புதிய உற்சாகமும் உத்வேகமும் உங்களுக்கு ஏற்படும். பணியில் பணிவும் துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் லாபமும் சோகமும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பொருள் வரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வெற்றி பெற தடைகளை தாண்டி முன்னேற செல்ல வேண்டியது இருக்கும். அதை நீங்கள் செய்வதற்கு தயங்க மாட்டீர்கள். பெரியவரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மையும் கிடைக்கும்.
வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். அதை போலவே வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் கொஞ்சம் கவனமாகவே பயன்படுத்துங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். அனைத்து காரியங்களும் வெற்றி கொடுக்கும்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
தனுசு :
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கை பாக்கியம் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விரும்பும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் இன்று ஏற்படும். இன்று எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியங்களில் தடை தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றால் மற்றவர்கள் வலிய வந்து வம்புக்கு இழுப்பார்கள். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று வாகனங்களில் செல்லும்போது மட்டும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இன்று வீடு மனை, வாகனம் போன்ற விஷயங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும்.
சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கும். பொறுமையை கையாள்வது நல்லது. இன்று நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிற ஆடையில் செல்லுங்கள். இல்லையேல் மஞ்சள் நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். அதேபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய பகவானை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் :
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொண்டாலே போதும் அத்தனை விதமான அனுகூலத்தையும் பெறமுடியும். மனைவியின் செயலால் உறவுகளிடையே சின்ன சின்ன உரசல்கள் ஏற்படும். அதையும் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள மிகவும் சிறப்பு. அப்போதுதான் இழப்பை நீங்கள் தவிர்க்க முடியும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வாடிக்கையாளர்களிடம் மட்டும் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் ஏற்படக்கூடும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது கரு நீல ஆடை அணிந்து சென்றாலோ அல்லது கைக்குட்டையை எடுத்துச் சென்றாலோ வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். நீங்கள் நினைத்தது நடக்கும். அதுபோலவே மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். தயவுசெய்து ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், மனதில் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுடைய செல்வ நிலை உயரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம் கருநீல நிறம்
கும்பம் :
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் திறமைக்கேற்ற பாராட்டு கிடைப்பதில் கொஞ்சம் சந்தேகம்தான். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகளை செய்து செய்து வீணாக்கி செல்வீர்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அது போலவே அக்கம்பக்கத்தார் உடன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வாகனங்களில் நிதானமாக சென்றால் விபத்துக்களை தவிர்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகச் சிறப்பு. பிள்ளைகளுக்காக அலைய வேண்டியிருக்கும்.
குடும்பங்களுக்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பணத்தேவை இன்றைக்கு இருக்கும். கடன்கள் மட்டும் தயவு செய்து வாங்காதீர்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி பெறவும் நாளாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் கருநீல நிறம்
மீனம் :
மீனம் ராசி நேயர்களே…!! இன்று குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். நல்ல ஆடைகள் நண்பர்களின் அருகாமை நல்ல அதிர்ஷ்டம் என எல்லாவற்றையும் இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையும் கிடைக்கும். இன்று பொருள் வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாகவே நடந்து முடியும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.
இன்று உடனிருப்பவர்கள் ஆதரவு கொடுப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். இன்று கூடுமானவரை நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். அதே போல நீங்கள் வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு சென்றால் அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் சென்றால் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும். மேலும் நீங்கள் வெற்றி வாய்ப்புகளை குவிப்பதற்கு காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை மேற்கொண்டு இந்த நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்