குடும்ப பிரச்சனை காரணத்தினால் கணவன் மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி காமராஜர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அணு என்பவரை காதலித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அணுவுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் பால முருகனுக்கும் அணுவிற்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்பின் பாலமுருகனை பிரிந்த அணு அவரின் தாய் வீட்டுக்கு சென்றுயுள்ளார். பிறகு தனக்கும் குழந்தைக்கும் வருமானம் தேவைப்படுவதால் வேலை தேடிய நிலையில் தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்துள்ளது.
வேலைக்கு செல்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கை குழந்தையை தாயின் விட்டு விட்டு ஒரகடம் பகுதிக்கு வந்துள்ளார். இதில் தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பாக வாலாஜாபாத் அடுத்ததாக இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட பாலமுருகன் விடுதிக்கு சென்று அணுவை சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பின்னர் கழுத்தில் வெட்டுப்பட்டதால் அனு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி விடுதி காவலர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாலமுருகனை கைப்பற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.