இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் சலுகை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பின்வரும் சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி பர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் என எந்த வங்கி கடனாக இருந்தாலும் பிராசசிங் கட்டணத்தில் 50% திருப்பி தரப்படும் என்றும், ரூபாய் 20 லட்சம் வரை விபத்து மரணம் காப்பீடு. ரூபாய் 30 லட்சம் வரை விமான விபத்து மரணம் காப்பீடு. லாக்கர் கட்டணத்தில் 25% தள்ளுபடி. மாத சம்பளத்தின் இரு மடங்கு தொகைக்கு ஓவர் டிராப்ட் வசதியும் பெறலாம் என்று அறிவித்துள்ளது.