கொரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டநிலையில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கடந்த 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.