கம்பத்தில் நடைபெற்ற கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கஞ்சா விற்பனை செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா விற்பனை தடுப்பதற்க்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் அதிகளவில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபடுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு தேவையான உதவிகளை கேட்டால் காவல்துறையினர் சார்பில் செய்து தரப்படும் என்று சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் எழுந்து நாங்கள் கஞ்சா தொழிலை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிறது எனவும், எங்களுக்கு ஏதேனும் வங்கி கடன் பெற்று தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி உமாதேவி தலைமை தாங்கியுள்ளனர். மேலும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கஞ்சா விற்பனை செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர்.