மூன்று மாவட்டங்களில் சுதந்திர தினம் 8 கோடியே 12 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக மதுபான கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதில் மாலை முதல் இரவு நேரம் வரை ஏராளமான மது பிரியர்கள் கடைகளின் முன்பாக குவிந்துள்ளனர். அதில் அவர்களுக்கு விருப்பமான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதில் வழக்கத்தைவிட அதிகமாக பீர் மற்றும் மது பானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதனையடுத்து வேலூர் மதுபான கூட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இருக்கும் 110 மதுபான கடைகளில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட 2 கோடி மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இதனால் ஒரே நாளில் 4 கோடியே 95 லட்சம் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
இதைப்போல் வழக்கமாக நாட்களில் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அரக்கோணம் மதுபான கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் மதுபான கடைகளில் மூன்று கோடியே 17 லட்சத்து மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் ராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரே நாளில் மொத்தமாக 8 கோடியே 12 லட்சத்து மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக மதுபான கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.