கூட்டுறவு சங்கத்தில் மகளிர் அணி செயலாளர் சாந்தியை கொடியேற்ற விடாததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் முன்பாக சுதந்திர தின விழாவிற்கு ஜோலார்பேட்டை அருகில் இருக்கும் பால்தான் குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி செயலாளரான சாந்தி தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க-வை சார்ந்த சிலர் சாந்தியை தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஒன்றிய தி.மு.க செயலாளர் கண்ணன் என்பவர் அங்கு தேசிய கொடி ஏற்றியுள்ளார். இதனால் கோபமடைந்த சாந்தி சங்க அலுவலகத்தில் வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாக வந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். மேலும் எதிர் திடீரென மகளிர் அணிச் செயலாளர் சாந்தி தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.