நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தோற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பு செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் மொத்தம் 6.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 6.16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.