Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் நியூ லுக்…. வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

நடிகர் பிரபு உடல் எடையை பாதியாகக் குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில்  வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் “நடிப்பின் ஆசான்” என எல்லோராலும் பெருமையுடன் அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார். இதனையடுத்து அவரது மகன் என்ற அடையாளத்தோடு நடிகர் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதனால் நடிகர் பிரபு நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடும் வகையில் இருந்தது.

Image

இதனையடுத்து திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு குறைந்ததும் அவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது “பொன்னியின் செல்வன்” என்ற திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபு தனது உடலை பாதியாக குறைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்னர்.

Categories

Tech |