தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்காததால் நாகை, வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முகாம் தொடங்கிய நேரம் முதல் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.