Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை மின்வாரிய அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தஞ்சையை அடுத்த துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதகுடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, வெந்தயம் பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தலூர், சோலகம்பட்டி, கடையக்குடி, உரத்த ராயநல்லூர், சாமிநாதபுரம், சிவகாமிபுரம், மோசஸ் புறம், விண்ணமங்கலம், முல்லைக்கொடி, ஆற்காடு, சித்திரக்குடி, குணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிரா மங்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Categories

Tech |