Categories
உலக செய்திகள்

ஓவர் நைட்டில் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்…. ‘SECOND-HAND’ ஃப்ரிட்ஜால் அடிச்ச ஜாக்பாட்…!!!!!!

தென்கொரியா நாட்டின் ஜேஜூ தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் Second-hand பிரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்ய பிரிட்ஜ் சமீபத்தில் அவரது வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டில் சும்மா இருந்த ஒருநாள், பிரிட்ஜை சுத்தம் செய்யலாம் என திறந்து பார்த்து, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 96 லட்சம் ரூபாய் அதனுள் இருந்துள்ளது. ஆனால் இது தன்னுடைய பணம் இல்லை என்பதால், இதுகுறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்.

போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்தாலும், அவருக்கு சன்மானமாக ஒரு தொகை வழங்கப்படும். தென் கொரிய சட்டப்படி, ஒருவர் பணத்தையோ, பொருளையோ கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தால், கண்டெடுத்த நபரை முதலில் விசாரிப்பார்கள். பின்னர் பணத்துக்குரிய நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவர். ஒருவேளை பணத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கண்டெடுத்த நபரிடமே போலீசார் ஒப்படைத்து விடுவர்.

ஒருவேளை பணத்துக்கான உரிமையாளர் கிடைத்துவிட்டால், அந்த பணத்தில் ஒரு பகுதி சன்மானமாக வழங்கப்படும். ஆனால் அது குற்றப்பின்னணி கொண்ட பணமாகவோ அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பணமாகவோ இருந்தால், இருவரிடமும் பணம் ஒப்படைக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |