Categories
ஆன்மிகம் இந்து

அன்னபூரணிக்கு நாம் எந்த அரிசியை படைக்க வேண்டும்… இது பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் உண்ணும் உணவு அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. அன்னபூரணியின் அருள் இருந்தால் வறுமை நீங்கி செல்வ, செழிப்புடன் இருப்போம். ஆனால் அன்னபூரணிக்கு எந்த அரிசியை படைக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவது கிடையாது. பெரும்பான்மையினர் புழுங்கலரிசியை படைக்கின்றனர். ஆனால் அப்படி செய்யக்கூடாது. எப்பொழுதும் பூஜைக்கு பச்சரிசியை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

அன்னபூரணி தாயாருக்கு வைக்கும் அரிசியானது பச்சரிசி ஆக இருப்பது மட்டுமே சிறந்தது. அரிசி தானே என்று ஏதாவது ஒரு அரிசியை வைக்காதீர்கள். வீட்டில் ஒரு அன்னபூரணி சிலை இருந்தால் நம் வீட்டில் உள்ள வறுமை நீங்கும். அந்த சிலையை வெறும் தரையில் வைக்காமல் கீழே ஒரு சிறிய அளவு பித்தளை அல்லது செம்பு தட்டு வைத்து, அந்தத் தட்டு நிறைய அரிசியை நிரப்பி அதன்மீது அன்னபூரணியை அமர்த்தவேண்டும். இப்படி வழிபாடு செய்தால் மிகவும் நல்லது.

Categories

Tech |