மத்திய பிரதேச மாநிலத்தில், சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடந்து வந்த வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வீட்டில் இருந்து சேரும் சகதியுமாக இருந்த பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியிலேயே 25 வயது இளம்பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories