தமிழகத்தில் கிரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.