பள்ளியின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டில் Ardingly பகுதியில் உள்ள கலோரி சாலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த ஒரு குழந்தை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் காரின் அடியில் சிக்கிய நான்கு குழந்தைகள் லேசான காயங்களுடன் ஆர்டிங்லி கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஆட்டோ டிரைவிங் மோட் உள்ள ‘டெஸ்லா’ வாகனம் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.