ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 12th Man படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம்- 2 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. விரைவில் இந்த படம் தமிழில் பாபநாசம்-2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
#12ThMan Pooja Photos#JeethuJoseph @antonypbvr @aashirvadcine pic.twitter.com/KuK8kg0UaE
— Mohanlal (@Mohanlal) August 17, 2021
தற்போது ஜீத்து ஜோசப் மீண்டும் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ’12th Man’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.