சீயான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வரும் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம். தற்போது இவர் சீயான் 60 படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதில் சிம்ரன், வாணி போஜன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீயான் 60 படத்தின் தலைப்பு மகான் என மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நிலையில் மகான் தான் தலைப்பாக இருக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.