ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் நான்காவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. இதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். மேலும் ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் நடிப்பில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் அன்பறிவு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Are you ready for another banger!
The fourth single #ThillalangadiLady from #SivakumarinSabadham drops this Wednesday at 11 AM!A @hiphoptamizha special @TGThyagarajan @SathyaJyothi_ #IndieRebels @it_is_madhuri pic.twitter.com/TZBuirTbMd
— Think Music (@thinkmusicindia) August 16, 2021
இதில் சிவகுமாரின் சபதம் படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தின் நான்காவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற ‘தில்லாலங்கடி லேடி’ என்கிற பாடல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.