டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அரியானா, பாணி பட்டில் அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு தொண்டை எரிச்சலும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Categories