வனப்பகுதியில் ஆதரவற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் எதிரில் இருக்கும் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் பாறையின் இடுக்கில் சாக்குப்பையில் நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் நாட்டு துப்பாக்கியை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.