Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென பாய்ந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட தொழிலாளி…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்….!!

தொழிலாளியை கரடி கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள பாறையின் இடுக்கில் இருந்து ஒரு கரடி வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அந்த கரடி சற்றும் எதிர்பாராத சமயத்தில் சேகர் மீது பாய்ந்து அவரை கடித்து குதறியுள்ளது.

இதனால் வலி தாங்க முடியாமல் சேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டதும் சக தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று கம்பு மற்றும் கற்களால் தாக்கி கரடியை துரத்தி உள்ளனர். அதன்பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேகரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கரடி மூன்றுபேரை தாக்கியதால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களும், தொழிலாளர்களும் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |