Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்டு விண்ணப்பம்….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

ரியல் எஸ்டேட் ஊழியரை சகோதரியின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோதிபுரம் பகுதியில் கிருஷ்ண பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரிக்கும் அவரது கணவர் பிரான்சிஸ் சேவியர் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

இதனால் கிருஷ்ண பிரசாத்தின் சகோதரி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிருஷ்ணபிரசாத் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணபிரசாத்திடம் பிரான்சிஸ் சேவியர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து கோபமடைந்த பிரான்சிஸ் சேவியர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ண பிரசாத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதன் பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிருஷ்ணபிரசாத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |