குடும்பத்தகராறு காரணத்தால் கட்டிட மேஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் சக்தி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நித்யா என்ற பெண்ணுக்கும் சக்தி குமாருக்கு சில மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நித்யாவிற்கு சக்தி குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அதன்பின் மனமுடைந்த நிலையில் இருந்த சக்தி குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைவாக வந்த காவல்துறையினர் சக்தி குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சக்திகுமார் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.