கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் மாணவருக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என்பது குறித்து வரும் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் கல்வி கட்டண பாக்கி காரணமாக ஆன்லைன் வகுப்பிலிருந்து மாணவர்களை விலக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் திறக்கப்பட்டால் நேரடி வகுப்பிலிருந்தும் விலக்கக்கூடாது. மேலும் தேர்வு எழுத அனுமதிக்காமல் இருப்பதும், தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது போன்ற புகார்கள் எழுந்தால் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.