Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. கலெக்டருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேத்தி பாரதி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் பெட்டியில் மனு ஒன்றை போட்டுள்ளனர். அந்த மனுவில் சுமார் 50 குடும்பத்தினர் தங்களது கிராமத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அப்பகுதியில் நடை பாதை இல்லாததால் முதியவர்களும், குழந்தைகளும் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் குடிநீர் வசதி இல்லாததால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பெண்கள் குடிநீரை எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |