Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்சில் மாயமான செல்போன்” CCTV காட்சியில் பிடிபட்ட சிறுவன்….. போலீசார் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் அந்த சிறுவன் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |