நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்குதான் ஆட்சியையும் அதிகாரமும், எனவே விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.