Categories
மாநில செய்திகள்

சென்னை வந்த மோடி … ”இங்கு வந்தது மகிழ்ச்சி”…. தமிழில் ட்வீட் பதிவு ..!!

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இன்றும் , நாளையும் சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் , சீன அதிபர்  ஜி ஜிங்பிங்_கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உள்ளனர்.இதற்காக இரு தலைவர்களும் சென்னை விமான நிலையம் வர இருப்பதால்  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சென்னை முதல் மாமல்லபுரம் வரை 16, 000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு சென்னை விமனநிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் , சபாநாயகர் தனபால் , ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்தும் , சால்வை அனுவித்தும் , புத்தகம் கொடுத்தும் வரவேற்றனர்.பிரதமருக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் சென்றார்.

இதனிடையே சென்னை வந்த பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் சென்னை வந்திறங்கியுள்ளேன்.கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |