திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்வின் முடிவில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.