Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… அரசு ஊழியர் சங்கத்தினர்… 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கியுள்ளார்.

இதனைதொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம், பெரியகுளம் ஆண்டிபட்டி, போடி, கம்பம், கடமலைகுண்டுஎன 8 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தகோரி பல கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |